விமான நிறுவன முதலீடுகளை குறைக்கும் வாரன் பஃபெட் : வளர்ச்சி குறையும் என்பதால் பங்குச் சந்தைக்கு கடிதம்
பங்குச் சந்தை மன்னர் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் விமான நிறுவன பங்குகளில் இருந்து, தனது முதலீடுகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
பங்குச் சந்தை மன்னர் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் விமான நிறுவன பங்குகளில் இருந்து, தனது முதலீடுகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தனது பெர்க்ஷர் ஹத்வே நிறுவனம் மூலம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் பத்து சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகளை வைத்துள்ளார். யுனைடெட் காண்டினெண்டல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸின் 4 சதவீத பங்குகளையும், டெல்டா ஏர்லைன்ஸின் 18 சதவீத பங்குகளையும் விலக்கி கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சுற்றுலா செல்வதற்கான ஆர்வம் மக்களிடம் குறையும் எனவும், இதிலிருந்து மீண்டு வருவது எப்போது எனத் தெரியாததால் வாரன் பஃபெட் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.