ஆளில்லா கும்மிருட்டில் நரபலி..நடுக்கத்தில் ஊர்மக்கள்..உடைந்த உண்மை..பகீர் பின்னணி | Tamilnadu

Update: 2024-11-26 10:45 GMT

15 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வைரக்கல் மலையில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் புதையல் இருப்பதாக கூறி பூஜைகள் செய்த போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது வைரக்கல் மலை மீது உள்ள பழைய பெருமாள் கோவில் அருகே சிவன் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மலையில் புதையல் இருப்பதாக சிலர் இரவு நேரத்தில் பூஜை செய்து வருவதாகவும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நரபலி கொடுக்கவும் வாய்ப்புள்ளதால் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மற்றொரு தரப்பு, சிவன் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காழ்புணர்ச்சி காரணமாக சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்