லெபனானில் பொருளாதார தேக்கநிலை - அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரம்
லெபனானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த வரும் நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் உருவானது.
லெபனானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த வரும் நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கலைத்தனர். இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்கள் கற்களாலும், கட்டைகளாலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். பொருளாதார தேக்கநிலையும், அந்நாட்டு ரூபாயின் மதிப்பு 50 சதவீதம் அளவுக்கு சரிவடைந்ததும், மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது இந்த போராட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.