லெபனானில் வரலாறு காணாத போராட்டம் - போராட்டக்காரர்கள் பொதுமக்கள் மோதல்
லெபனான் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது.
லெபனான் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனனர். இரவில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த மோதலில் போலீசார் உள்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அக்டாபர் 17 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடந்து வரும் இந்த போராட்டம், லெபனான் வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெறும் போராட்டமாக கருதப்படுகிறது.