பள்ளிக்கு சென்ற இளவரசர் வில்லியம்சின் மகள்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத் தம்பதியின் 2வது குழந்தையான இளவரசி சாரோலேட் இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேத் தம்பதியின் 2வது குழந்தையான இளவரசி சாரோலேட் இன்று முதல் முறையாக பள்ளிக்கு சென்றார். தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரன் ஜார்ஜின் கையை பிடித்தவாறு பள்ளிக்கு சென்றார். 560 குழந்தைகள் பயிலும் அந்த பள்ளியின் வருடாந்திர கல்விக் கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ராணி எலிசபெத்தின் கொள்ளு பேத்தியான சாரோலேட் பள்ளிக்கு செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.