தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்பு : முதலமைச்சர் முன்னிலையில், 19 நிறுவனங்கள் கையெழுத்திட்டன

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2019-09-05 04:47 GMT
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க்கில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சான் ஹீசே நகருக்கு சென்ற முதலமைச்சருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, பூங்கொத்து  கொடுத்தும், சால்வை அணிவித்தும் அங்குள்ள தமிழர்கள் வரவேற்றனர். பின்னர் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சரை, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது. பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதலீட்டாளர்களிடம், தடையற்ற மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளது. எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் தொழில் தொடங்க 16 தொழில் நிறுவனங்கள் மற்றும் 3 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்தன. இதையடுத்து, 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 19 நிறுவனங்கள் கையெழுத்திட்டன. இதன்மூலம் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags:    

மேலும் செய்திகள்