இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவு

இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது.

Update: 2019-06-24 13:20 GMT
இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 5 ஆக பதிவானது.  200 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக கட்டடங்களை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும், விடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்