மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முயற்சிக்கு வெற்றி - இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்

கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் படையினர் 44 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2019-05-01 19:24 GMT
கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் படையினர் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி, ஐநா சபையில் தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக சர்வதேச போலீசாருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிராக நியாயம் நிலைநாட்டப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மசூத் அசார் தலைமறைவாக உள்ளதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்