அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுங்கள் : இலங்கை அதிபருக்கு அயல்நாட்டு தூதர்கள் வேண்டுகோள்
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைதியை நீடிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம், இலங்கைக்கான வெளிநாட்டு தூதர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைதியை நீடிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு
அதிபரிடம், இலங்கைக்கான வெளிநாட்டு தூதர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக அந்நாட்டில் உள்ள அயல்நாடுகளின் தூதர்களுக்கு, தெளிவுபடுத்தும் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
* இலங்கை அரசியல் அமைப்பிற்கு ஏற்ப, தனக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டே பிரதமரை நியமித்து உள்ளதாகவும், அணிசேரா கொள்கைக்கு ஏற்ப அனைத்து நாடுகளுடனும் இருந்து வரும் உறவுகளை மேலும் பலப்படுத்தி முன் கொண்டு செல்வதற்கும், நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் மைத்ரிபால ஸ்ரீ சேன கோரியதாக கூறப்படுகிறது.