அமெரிக்கா : வீடியோ கேமில் தோல்வியடைந்தவர் வெறிச்செயல்...
வீடியோ கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் நகரில் "லேண்டிங்" எனும் வணிக வளாகத்தில் வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, 'கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.