செவ்வாய் கிரகத்தில் பரந்து விரிந்த ஏரி

செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கலாம் என்பது முன்னரே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு பரந்து விரிந்த ஏரி இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Update: 2018-07-26 04:42 GMT
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி என்ற விண்கலம், அங்கு ஏரிப்படுகை போன்ற அமைப்பு இருந்ததாக முன்னர் கண்டறிந்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற திட்டத்தின் கீழ் அனுப்பிய மார்சிஸ் என்ற ரேடார் கருவியின் மூலம் அங்கு ஏரி இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள் , மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக  தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்