- யூடியூபர் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் நடப்பது தொடர்பான மற்றொரு வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பிரசவத்திற்கு பிறகு, குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்ஃபான் தனது YouTube சேனலில் பதிவேற்றம் செய்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என்றும் இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்றும் திட்டவட்டமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த வீடியோவை இர்ஃபான் நீக்கி இருந்த நிலையில், யூடியூபர் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் நடப்பது தொடர்பான மற்றொரு வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இர்ஃபான் மனைவி ஆசிபா கடந்த அக்டோபர் மாதம் உருவாக்கிய டெடி வித் ஹனி என்ற மற்றொரு YouTube சேனலில் சர்ச்சைக்குரிய பிரசவ வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையில் இர்பான் மற்றும் இர்பான் மனைவி நிர்வகிக்கும் சமூக வலைதள பக்கமா அல்லது வேறு யாரேனும் உருவாக்கிய youtube சேனலில் இந்த வீடியோவை பதிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.