விருத்தாசலத்தில் உள்ள கடலூர் சாலையில், இரண்டு இளைஞர்கள் டயரை கொளுத்திச் சென்றனர். கடலூர் மாவட்டம், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் இன்று என்எல்சி நிர்வாகம் சார்பாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சாலையில் டயரை கொளுத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் டயரை கொளுத்தினரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.