"திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை" - அமைச்சர் கீதா ஜீவன் | magalir urimai thogai

Update: 2023-10-02 02:23 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தோல்வியடைந்தால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கீதா ஜீவன், கட்சி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பதற்காக, முதல்வர் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்