"பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" - திமுக எம்பி முன்வைத்த கோரிக்கை
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு மணி நேரமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 51 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்ட திருச்சி சிவா, டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் கூடுதல் சிக்கலை பெண்களுக்கு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். எனவே டீப் ஃபேக் மற்றும் சைபர் கிரை குற்றங்கள் போன்றவற்றால் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டு சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.