தாய் கண்முன்னே செயினை அபேஸ் செய்ய முயன்ற டிப் டாப் லேடி..ஒரு கை பார்த்த அக்கம் பக்கத்தினர்...|
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கைக் குழந்தையுடன் சந்தை பகுதிக்கு மீன் வாங்க வந்துள்ளார். மீன் வாங்கி விட்டு அவர் பேருந்திற்காகக் காத்திருக்கும் போது, அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் தான் அணிந்திருந்த ஷாலை குழந்தையின் தலைமீது போட்டு விட்டு குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப் பறித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் அப்பெண்ணைப் பிடிக்க முயலவே, அவர் தப்பி ஓட முயன்றுள்ளார். அந்தத் தாய் சத்தம் போட்டு கத்தியதால் அந்தத் திருட்டு பெண், சங்கிலியைக் கீழே போட்டுவிட்டு தப்ப முயன்ற நிலையில், ஊர் மக்கள் அப்பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து சாலையின் நடுவே அமர வைத்து, தப்ப விடாமல் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருட்டு பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.