சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, சாலை விபத்தில், கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். ஆவுடைபொய்கை அருகே முறையூரில் பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன், மனைவி வளர்மதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த கிரேன் மீது இருசக்கர வாகனம் லேசாக உரசியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த வளர்மதி, கிரேன் சக்கரத்தில் விழுந்து கணவன் கண் முன்னே பலியானார். விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்