"டிபன் பாக்சில் வந்த கண், உடல் பாகங்கள்" - நாடே நடுங்கிய கோரத்தில் யாரும் சொல்லாத கதை
டிபன் பாக்சில் வந்த கண், உடல் பாகங்கள்" - நாடே நடுங்கிய கோரத்தில் யாரும் சொல்லாத கதை வயநாடு நிலச்சரிவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழகம் கேரள அவசர ஊர்திகளின் ஓட்டுநர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை கூடலூரை சேர்ந்த 3 ஆம்புலன்ஸ்கள், கேரளாவை சேர்ந்த 5 ஆம்புலன்ஸ்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டன. 10 நாட்கள் உணவு குடிநீர் இன்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரை காப்பாற்றியுள்ளனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் கூடலூரில் பாராட்டு விழா நடைபெற்றது. கூடலூர் எம்எல்ஏ ஜெயசீலன், காவல்துறை கண்காணிப்பாளர் வசந்த் ஆகியோர், கூடலூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 3 பேருக்கும், கேரள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 5 பேருக்கும் பரிசுகள் கேடயங்களை வழங்கி பாராட்டினர். அவர்களுக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மீட்புப் பணி குறித்து பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், இதுபோன்ற பேரழிவு இனி வரக்கூடாது என்றனர்.