இந்தியாவை உலுக்கிய வயநாடு பேரழிவு.. மத்திய அரசை சாடிய CM பினராயி விஜயன்

Update: 2024-11-03 01:53 GMT

இந்தியாவை உலுக்கிய வயநாடு பேரழிவு.. மத்திய அரசை சாடிய CM பினராயி விஜயன்

90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஒரு பைசாகூட வழங்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

கேரள மாநிலம் உருவாக்கப்பட்டதன் 69-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் பேசிய பினராயி விஜயன், வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடைபெற்று 90 நாட்கள் ஆகியும் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மத்திய அரசு ஒரு பைசா கூட ஒதுக்காதது கொடூரமான புறக்கணிப்புக்கு ஆதாரம் என குற்றம் சாட்டினார். மற்ற மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, அந்த மாநிலங்கள் கேட்பதற்கு முன்னதாகவே நிதி ஒதுக்கு மத்திய அரசு, கேரளா உதவி கேட்டும் உதவவில்லை, வேண்டும் என்றே புறக்கணிக்கிறது என விமர்சித்தார். கேரள உயர்நீதிமன்றமும், சட்டமன்றமும் மத்திய அரசுக்கு ஆயிரத்து 202 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்திய போதிலும், மத்திய அரசு தருவதற்கு தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார் 

Tags:    

மேலும் செய்திகள்