கடலூரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களை நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் கடலூர் நகரம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வளவு பயணிகளுடன் செல்ல வேண்டும் என்பது குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போலீசார் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அளவுக்கு அதிகமான நபர்கள் ஆட்டோவில் பயணிக்கும் பொழுது விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த ஒரு இழப்பீடும் கிடைக்காது. ஒரு ஆட்டோவில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்ற கூடாது என எச்சரித்து அனுப்பினர்.