Conference Call...மக்களே உஷார்..!..காவல் ஆணையர் விடுத்த எச்சரிக்கை

Update: 2023-09-28 12:03 GMT

ஆன்லைனில் Fedex Courier என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் ஆன்லைனில் Fedex Courler என்ற பெயரில், அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்சல் வந்திருப்பதாகவும், அதில் புலித்தோல், விலை உயர்ந்த நகைகள், சட்டவிரோதமான போதைபொருட்கள் இருப்பதாகவும் கூறுவதாக புகார் எழுந்துள்ளது. மும்பை சைபர் கிரைம் காவல் அதிகாரிகள் விசாரிப்பதாகக் கூறி, பொதுமக்களை தொலைபேசியில் கான்ஃபிரன்ஸ் அழைப்பில் இணைத்து விசாரணை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளிநபர்களிடம் தெரிவிக்கக் கூடாது எனவும், தங்கள் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர்களை அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் பணத்தை பரிவர்த்தனை செய்யவும் வலியுறுத்தப்படுகின்றனர். எனவே, ஆன்லைனில் Fedex Courier என்ற பெயரில் மோசடி குறித்து சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், தேசிய சைபர் கிரைம் இணையதளம் வாயிலாக புகார் அளிக்குமாறும் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்