நடுரோட்டில் அரசு பஸ்க்கு அடியில் படுத்து கொண்ட இருவர்... அடம்பிடித்ததால் பெரும் பரபரப்பு
விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் குடி போதையில் 2 பேர் அரசு பேருந்து முன் படுத்து ரகளையில் ஈடுபட்டனர். சேலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், நிர்மல் ஆகிய இரண்டு பேரும் ஜெயங்கொண்டதில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு விசேஷத்துக்கு வந்து திரும்பும் போது மதுபோதையில் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அங்கு மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்து முன்பு படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.