"நீ என்ன சொன்னாலும் செய்வேன்.."சிறுமிக்கு தாய்போல் பாசம் காட்டும் காகம்..! இணையத்தில் பரவும் வீடியோ

Update: 2024-07-22 04:47 GMT

கேரள மாநிலத்தில் ஊஞ்சலாடும் சிறுமியின் தலையை அன்பால் வருடும் காகத்தின் வீடியோ, காண்போரை வியப்படைய செய்துள்ளது. சிறுமி தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது காகம் ஒன்று சிறுமியின் மேல் அமர்ந்து நட்பாக பழகி வந்துள்ளது. அதன் பின் சிறுமி ஊஞ்சல் ஆடும்போதெல்லாம், காகம் சிறுமியின் தலைமேல் அமர்ந்து சிறுமி கூறுவதுபோல் தலையை வருடி தனது அன்பே காண்பித்து வருகிறது. தற்போது, சிறுமியிடம் காகம் அன்போடு பழகும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்