வினேஷ்க்கு வெள்ளி..? நாடே உற்றுநோக்கும் ஒரு தீர்ப்பு

Update: 2024-08-10 02:54 GMT

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் மேல்முறையீடு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் கலந்துகொண்ட வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்தும் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை மத்தியஸ்தர் அனபெல் பென்னட் சுமார் 3 மணி நேரம் விசாரித்தார். காணொலி காட்சி மூலம் இதில் வினேஷ் போகத் கலந்துகொண்ட நிலையில் அவர் தரப்பு வாதங்களை வழக்கறிஞர்கள் முன்வைத்தனர். சர்வதேச மல்யுத்த சம்மேளனம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கருத்துகளும் கேட்கப்பட்டு விசாரணை முடிந்த நிலையில், நல்ல தீர்ப்பு வரும் என நம்புவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்