மண்ணுக்குள் புதைந்திருந்த 1500 ஆண்டுகள் பழமையான வித்தகர் விநாயகர் கோயில் | Vinayagar | Salem

Update: 2024-08-27 04:59 GMT

சேலம் உத்தமசோழபுரத்தில் குப்பைகள் மூடி மண்ணுக்குள் புதைந்திருந்த விநாயகர் கோயில் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றின் ஓரமாக வித்தகர் விநாயகர் கோயில் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பசுமை தமிழகம் என்ற அமைப்பினர், குப்பைகள் மற்றும் மண்ணை அகற்றி ஒரே பாறையில் விநாயகர் சிலை இரண்டடி சிற்பமாக செதுக்கப்பட்டிருந்த சிலையை மீட்டனர். அங்கு, தூண்களும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது இதனை சுற்றி வட்டார மக்கள் கூட்டமாக சென்று விநாயகர் சிலையை கண்டு வணங்கி செல்கின்றனர். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய இடம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலை பாதுகாத்து மக்கள் வழிபடும் தளமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்