கல்குவாரியை மூடக்கோரி - நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Update: 2023-11-07 01:50 GMT

கல்குவாரியை மூடக்கோரி - நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கல்குவாரியை மூட வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் நடுவக்கரை குன்னவாக்கம் கிராமத்தில் 9 ஆண்டுகளாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், அங்கு வெடி வைப்பதால் வீடுகள் அதிர்வதாகவும் குற்றம் சாட்டிய பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் குவாரிக்கு ஆதரவாக திருக்கழுன்றம் காவல்துறை ஆய்வாளர் செயல்படுவதுடன் பொதுமக்களை மிரட்டுவதாக கூறி குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏறபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்