தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முன்னிட்டு, அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறும் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.