தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
சென்னையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. நாளை மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்ட உள்ளார். காலை 9.30க்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த பாராட்டு விழாவுக்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர், பேனா கொண்டு வரக்கூடாது என்றும், மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது