``விஜய்சேதுபதியை அடித்தால் பணப் பரிசு'' - அறிவித்த அர்ஜூன் சம்பத்துக்கு விழுந்த இடி

Update: 2024-08-09 03:42 GMT

விஜய்சேதுபதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முத்தராமலிங்க தேவர் குறித்து விஜய் சேதுபதி சர்ச்சையாக பேசியதாகவும், இதனால் அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசாக ஆயிரத்து ஒரு ரூபாய் வழங்கப்படும் என பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை நடுவர் நீதிமன்றம், அர்ஜுன் சம்பத்திற்கு தண்டணையாக 4000 ரூபாய் அபராதம் விதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்