தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை... - பாலச்சந்திரன் சொன்ன தகவல்

Update: 2023-11-04 04:27 GMT

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்தார். கன்னியா குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, ஈரோடு, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்தார். சென்னையை பொருத்தவரை அவ்வப்போது மிதமான மழையும் சில சமயங்களில் பலத்த மழையும் பெய்யக் கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்