``இப்படி ஒரு கேவலத்த நான் எங்கேயும் பாத்ததே இல்ல’’ - அருவருப்பில் கடுமையாக திட்டிய வேல்முருகன்

Update: 2024-10-24 02:59 GMT

``இப்படி ஒரு கேவலத்த நான் எங்கேயும் பாத்ததே இல்ல’’ - அருவருப்பில் கடுமையாக திட்டிய வேல்முருகன்

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் கரூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி பேருந்து நிலையத்தில் குழுவின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் பொதுக்கழிப்பிடம், கட்டண கழிப்பிடம், தாய்ப்பால் ஊட்டும் அறை, தேனீர் கடைகள், உணவகங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக பொது கழிப்பிடத்தை ஆய்வு செய்த அவர்கள் கழிப்பிடத்தின் மோசமான நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளிடம் பேசிய வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழு ஆய்வுக் கூட்டம் முடிவதற்கு முன்பாக பொதுக் கழிப்பிடத்தை சரி செய்து புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கா விட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதற்கு பரிந்துரை செய்வேன் என எச்சரித்தார்..

இதன் பின்னர் உடனடியாக அந்த கழிப்பிடம் தூய்மைப்படுத்தப்பட்டு மாலையில் சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் புகைப்படம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்