பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..ஆபத்துக்கு விலை கொடுக்கும் மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் ஆபத்தான முறையில் மக்கள், மாணவர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பாலத்தை கடந்து சென்றனர். மாற்றுப்பாதையில் செல்ல வெகு தூரம் என்பதாலும், போதிய நேரமின்மை காரணமாகவும் ஆபத்தான முறையில் ஆற்றை கடப்பதாக வேதனை தெரிவித்த சமூக ஆர்வலர்கள், தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தரைப்பாலங்கள் அருகே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.