ஆசிரியர்கள் மட்டும் வகுப்பறைக்குள் காலணி அணியும் போது, மாணவர்களையும் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று, சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு அறிவுறுத்தியுள்ளது. வேலூரில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் அன்பழகன் தலைமையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் சுகாதாரமில்லாமல் இருப்பதும், பள்ளி மாணவர்கள் காலணிகளை வெளியே விட்டுவிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து இருப்பதை கண்டனர். ஆசிரியர்கள் மட்டும் வகுப்பறைக்குள் காலணி அணியும் போது, மாணவர்கள் ஏன் அணியக்கூடாது? என குழு தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பினர்.