வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி மாசுபடா அம்மன் கோயிலில், ஆடி ஆறாம் வெள்ளியை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தீச்சட்டியுடன் ஊர்வலமாக வந்து தீமிதி நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் உடலில் அழகு குத்திக்கொண்டு கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.