தீயாய் பரவிய ஒற்றை வீடியோ... எதிர்பாரா நேரத்தில் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக காவலரும், ஊர்காவல்படை வீரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகொண்டா சோதனை சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களிடம், இரண்டாம் நிலை காவலர் சங்கரும், ஊர்காவல் படை வீரர் நவீனும் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக காவலர் சங்கர், ஊர்காவல்படை வீரர் நவீன் ஆகியோரை சஸ்பெண்ட செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.