``நீ சம்பாரிக்க நான் சாப்ட்டு சாவணுமா? - மோந்து பாரு.. என்னத்த கலக்குற'' - தீயாய் பரவும் வீடியோ
சென்னை அடுத்த வானகரம் பகுதியில் கெட்டுப்போன நண்டு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட மீன் சந்தையில் இயங்கி வரும் கடையில், கெட்டுப்போன நண்டு விற்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து கடைக்காரர் அலட்சியமாக பதிலளிப்பது போன்ற காணொளி ஒன்றும் வைரலாகி வருகிறது. மேலும், மீன் சந்தையில் பார்மலின் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது..