தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா..! `கண்ணீர் வடிக்கும் மாணவிகள்... 77 ஆண்டுகால அவலம் - தீர்வு எப்போது..?
77 ஆண்டுகளாக பேருந்து போக்குவரத்தே இல்லாத கிராமம் தமிழகத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?...எங்கு இந்த அவல நிலை?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
ஏதோ பத்தடி தூரத்தில் உள்ளது போல் விண்வெளிக்கு ராக்கெட்டில் மின்னல் வேகத்தில் சென்று வருமளவு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் கால கட்டத்தில்...
விழுப்புரத்தில் உள்ள இந்த வைலாமூர் கிராமம் எவ்வித போக்குவரத்து வசதிகளுமின்றி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது...
5 ஆண்டுகளுக்கு முன்பு தான் தார் சாலையையே பார்த்துள்ளது இந்த கிராமம்...
ஆனால் இன்னும் பேருந்தின் தடத்தைக் கண்டதில்லை...
இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்தாலும் தெரியாது... உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வீடு வந்து சேர வேண்டும்...
பள்ளிப் பிள்ளைகளின் வசதிக்காக காலை மாலை வேளைகளிலும்...பணிக்கு செல்லும் பெண்கள் பாதுகாக்க இரவு வேளையிலும் அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது...
தமிழக அரசின் நடவடிக்கையால் பேருந்தில்லா வைலாமூர் கிராமத்திற்கு வழி பிறக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்...