அமெரிக்காவை அதிர வைத்த `உ.பி.' கும்பல்... ``ஒரே சொடுக்கில்'' அதிர வைக்கும் பின்னணி

Update: 2024-10-17 17:06 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடத்தப்பட்ட வந்த இரு போலி கால் சென்டர்களையும் அதனை நடத்தி வந்தவர்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சாகர் என்பவர் நடத்தி வந்த கால்சென்டரில் அமெரிக்கக் குடிமகன்கள் போலப் பேசுபவர்களை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.மேலும் அமெரிக்க நாட்டினர்களின் இமெயில்களுக்கு பாப் அப் தகவல்களை அனுப்புகின்றனர். அதனை அவர்கள் கிளிக் செய்தவுடன் அவர்களின் கம்ப்யூட்டரை செயலிழக்கச் செய்து விடுவார்கள். பின்னர் மைக்ரோசாப்ட் என்ஜினியர்கள் என்று கூறிக் கொண்டு அவர்களைத் தொடர்பு கொள்ளும் இந்த கும்பல், அவர்களது கம்ப்யூட்ர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடி பல லட்சங்களை மோசடி செய்ததாகவும் வாக்குமூலம் அளித்து இருக்கின்றனர். மோசடி செய்த லட்சக்கணக்கான பணத்தை பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து 14 பெண்கள் உட்பட 43 பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர் மேலும் அவர்களிடம் இருந்து 66 லேப் டாப்புக்கள் மற்றும் 13 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்