நெருங்கிய நண்பர்களுடன் சென்று பிணமாக வீடு வந்த இளைஞர் - வெளியான பகீர் தகவல்

Update: 2024-01-17 02:52 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்க்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். எலக்ட்ரீசியனான இவரை, அவரது நெருங்கிய நண்பர்களான பன்னீர் செல்வம் மற்றும் சுரேஷ் ஆகியோர் மது அருந்த அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இளைஞர்கள் சுரேஷ் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சுரேஷின் நண்பரான சிவா என்பவர், காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த சம்பவத்தில் தற்போது கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் தான் இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பவத்தன்று மது அருந்திய போது பேசியதில் தகராறு ஏற்பட்டு ராஜ்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவர, அவரின் நண்பர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில், கொலை செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்