கீழே சிந்திய 100 ரூபாய் பெட்ரோல்...வாய் விட்ட நபர்..பைக்கில் வைத்தே பொளந்து கட்டிய ஊழியர்..

Update: 2024-06-18 03:03 GMT

கீழே சிந்திய 100 ரூபாய் பெட்ரோல்...வாய் விட்ட நபர்..பைக்கில் வைத்தே பொளந்து கட்டிய ஊழியர்.. பரபரப்பு காட்சிகள்

உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் பெட்ரோல் வாங்க வந்தவரை, பங்க் ஊழியர் கடுமையாகத் தாக்கி, புரட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உளுந்தூர்பேட்டை- சேலம் சாலையில், ஏ.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த ராஜ்கிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர், தண்ணீர் பாட்டிலில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி உள்ளார். பெட்ரோல் நிரப்பும்போது, கீழே சிந்தியதால் பங்க் ஊழியர் அழகுவேலிடம் ராஜ்கிருஷ்ணன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பெட்ரோல் போட வந்தவரை, பங்க் ஊழியர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு கிடைத்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்