சரமாரியாக கேள்வி கேட்ட MLA-க்கள்..கடிந்து கொண்ட அமைச்சர் கே.என். நேரு..

Update: 2024-08-17 02:47 GMT

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் முன்னிலையில், திமுக எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் சரமாரியாக புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படத்தியது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே என் நேரு, மா. சுப்பிரமணியன் , சேகர் பாபு மற்றும், திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஏற்கனவே துவங்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து, அமைச்சர் நேரு கேள்வி எழுப்பினார். பணிகள் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆவேசமான அமைச்சர் கே.என் நேரு, இப்படியான பதில்களை சொல்லாமல், பணிகளை விரைந்து முடிக்குமாறு கடிந்து கொண்டார். தமது தொகுதியில் சில இடங்களில் மழை, வெள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றும், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார். இதேபோன்று, ஆளுங்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளே, அமைச்சர்கள் குழுவிடம் சரமாரியாக புகார்களை தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்