மீண்டும் தேதி குறித்து கொடுத்த கடலூர் ஜோசியர்.. ஸ்கிராட்ச்-ல இருந்து ஆரம்பிக்கும் விஜய்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வரும் அக்டோபர் 3வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தார்...
காவல்துறையின் அனுமதி தாமதமாக கிடைத்த காரணத்தால் குறுகிய காலத்தில் மாநாட்டை நடத்த முடியாமல் போனது.
இந்நிலையில், அக்டோபர் 3வது வாரத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடலூரில் உள்ள ஜோதிடர் சந்திரசேகரிடம் விஜய் தரப்பு கலந்தாலோசித்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது...
அதன்படி தவெக முதல் மாநில மாநாடு அக்டோபர் 20 முதல் 27க்குள் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மீண்டும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கவும் தவெக திட்டமிட்டுள்ளது