ஜெகஜோதியாக மின்னும் தவெக மாநாட்டு திடல் - கண்ணை பறிக்கும் கழுகுப் பார்வை காட்சி

Update: 2024-10-27 01:39 GMT

ஜெகஜோதியாக மின்னும் தவெக மாநாட்டு திடல் - கண்ணை பறிக்கும் கழுகுப் பார்வை காட்சி

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. தொண்டர்களுக்கும் வர தொடங்கியுள்ள நிலையில், மாநாடு நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பட்டுகள் செய்யப்பட்டு, சில பொருட்கள் கொண்டுவர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் எல்இடி திரைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள், ஹீலியம் பலூன்கள் மற்றும் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறைகள், மருத்துவக் குழுக்கள், வழிகாட்டுதல் குழுக்கள் போன்றவற்றுடன் இறுதி கட்ட ஏற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்