குழந்தையோடு அவதிப்பட்ட மாற்றுத்திறனாளி-"எப்பவும் உங்கள மறக்க மாட்டேன்" -உதவிக்கரம் நீட்டிய தவெகவினர்
புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண், கணவரை இழந்த நிலையில் பெண் குழந்தையுடன் குடிசையில் வசித்து வருகிறார். வீட்டில் கழிப்பறை இல்லாததால், இயற்கை உபாதைகள் கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்று அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர் பர்வேஸ், உடனடியாக வீட்டில் கழிவறையை கட்டிக் கொடுத்து ஒப்படைத்தார். தனக்கு உதவி செய்த பர்வேசுக்கும், தமிழக வெற்றி கழகத்துக்கும் புவனேஸ்வரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.