"தவெக மாநாட்டுக்கு சென்று 74 கி.மீ தூரம் நடந்தே வந்தேன்" - மகனை கண்டதும் கதறிய தாய்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்று மாயமானதாக கூறப்பட்ட கல்லூரி மாணவர் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன், நண்பர்களுடன் த.வெ.க. மாநாட்டுக்கு சென்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மாயமானார். இரவு வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே, செல்போனில் சிக்னல் கிடைக்காததால் திருவண்ணாமலை நெடுஞ்சாலை வரை நடந்து சென்ற இளைஞர், இரவு லிப்ட் கேட்டு காரில் சேலம் வரை சென்று பின்னர் அங்கிருந்து ஒரு முதியவர் உதவியால் வீடு திரும்பியதாக குறிப்பிட்டார். வீடு திரும்பிய மகனை பார்த்த உடன் அவரது தாய் கதறியபடி கட்டி அணைத்து அன்பை பொழிந்தது நெகிழ வைத்தது.