வயிற்றுப்போக்கால் பெண் பலி.. தாயில்லா பிள்ளையான 5 வயது மகள்.. கதறும் மக்கள்

Update: 2024-06-15 08:16 GMT

திருச்சியில் வயிற்றுபோக்கு காரணமாக பெண் உயிரிழந்த நிலையில், அசுத்தமான தண்ணீர் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மீனாவுக்கு தொடர் வயிற்றுபோக்கு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீரை ஆய்வு செய்து, பிளீச்சிங் பவுடர் தெளித்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இனியாவது சுத்தமான குடிநீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்