திருச்சியை அலறவிட்ட சிசிடிவி.. இந்த காரியத்த பண்ணது சிறுவர்களா? அரண்ட போலீஸ்

Update: 2024-09-14 10:57 GMT

திருச்சியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது . தில்லைநகர் 10வது கிராஸ் பிரதான சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏடிஎம்-ல் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் போதையில் வந்த இரு சிறுவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் ஆனால் ஏடிஎம் ஐ உடைக்க முடியாததால் திரும்பி சென்றதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்