சிறுமியின் உயிர் பறித்த நூடுல்ஸ்,கோக்?..அதிகாரிகளை கண்ணில் பட்ட 800 கிலோ - மக்களே உஷார்
திருச்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியமங்கலத்தில் ஆன்லைன் மூலம் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில், நூடுல்ஸ் மொத்த வியாபார கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பரிசோதனைக்காக ஒரு நூடுல்ஸ் பாக்கெட், மாதிரிக்கு எடுத்து அனுப்பப்பட்டது. காலாவதியான 800 கிலோ உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.