திருச்சியில் பரபரப்பு.. திடீரென போராட்டத்தில் குதித்த ஒரு சமுதாய மக்கள்

Update: 2024-06-03 04:23 GMT

திருச்சி மாவட்டம் மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில், உடல்நலக்குறைவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்மாபட்டி ஏரியில் இறுதிச்சடங்குகள் செய்ய முயன்ற போது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரி கரை அருகில் உடலை அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து, அங்கேயே அமர்ந்து தங்களுக்கென தனி இடம் கோரி அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்