தந்தைக்கு சாப்பாடு கொண்டு சென்று சடலமான சிறுவன்.. திருச்சியில் பெரும் சோகம்
தந்தைக்கு சாப்பாடு கொண்டு சென்று சடலமான சிறுவன்.. திருச்சியில் பெரும் சோகம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 12ம் வகுப்பு மாணவரான திவாகர் , பெரமூர் பகுதியில் தோட்டத்து வேலைக்கு சென்ற தனது தந்தைக்கு சாப்பாடு கொண்டு சென்ற வழியில் மழை பெய்ததால் வயலில் ஓரமாக நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். மின்னல் தாக்கியதில் திவாகர் மயக்கமடைந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த சிறுவனின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.